சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மூன்று நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிபேட், செங்கல்பட்டு, திருவாரூர், கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு விடுத்து இருக்கிறது.
“ வெப்ப அலை மெல்ல தணிந்து வரும் நிலையில் அடுத்து என்னது கனமழையா, அய்யோ என பரிதவிக்கின்றனர் சென்னைவாசிகள் “