தமிழ்நாடு | ‘அடுத்த 24 மணி நேரத்திற்கு, 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு’
There Will Be A Rain Possibilities For Next 24 Hours In 10 District In TN Idamporul
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
“ வழக்கமான மழைப்பொழிவைக்காட்டிலும் இந்த முறை மழைப்பொழிவு தென் இந்தியாவில் மிகவும் பொய்த்து இருக்கிறது. பருவகால மாற்றம் இந்தியாவின் காலச்சூழலையே மாற்றி இருப்பதை உணர முடிகிறது “