தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
“ தென்னக இந்தியாவில் பருவமழை இல்லாமல் பயிர்கள் பொய்த்துக் கொண்டு இருக்கிறது. வடக்கே மேக வெடிப்பினால் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பருவ கால மாற்றத்தின் அறிகுறிகள் மெல்ல மெல்ல இந்தியாவில் தலை தூக்க துவங்கி இருக்கிறது “