தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
There Will Be A Rain Possibilitis For Next 4 Days In TamilNadu 07 10 23 Idamporul
தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
மேற்கு திசை காற்று மாறுபாட்டின் காரணமாக, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது.
“ இந்நேரமே ஒரு 10 சதவிகித மழை பொழிந்து இருக்க வேண்டும் தமிழகத்தில், ஆனால் காலநிலை மாறுபாட்டின் காரணமாக தென் இந்தியாவில் ஒட்டு மொத்தமாகவே பருவமழை தவறுவது அதிகரித்து இருக்கிறது “