வட தமிழகத்தில் ஜூன் 25 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

There Will Be A Moderate Rain Untill June 25 Says Weather Reports Idamporul
தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் ஜூன் 25 வரை மித மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும் வரும் ஜூன் 25 வரை அதீத காற்றுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
“ கடலோரப்பகுதிகளில் காற்றின் வேகம் 55-60 கி.மீ வரை வீசக்கூடும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது “