தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
There Will Be A Heavy Rain Possibilities In 11 Districts 06 01 24 Idamporul
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இது போக இன்னும் ஒரு சில வட தமிழக பகுதிகளில் மிதமான மழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது “