தமிழகத்தில், 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
There Will Be Rain Possibilities In 11 District In TN 14 10 23 Idamporul
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
“ திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை இருக்கும் என கூறப்பட்டு வருகிறது “