அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
There Will A Rain Possibilities For Next 2 Days In South TN 17 10 23 Idamporul
அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. மழை இல்லாது வற்றிப்போன தென் தமிழக நதிகள் இந்த மழையால் ஆவது உயிர்ப்பெறுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ மழைப்பொழிவு இல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏரல், அகரம், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை செழிப்பு குறைந்து இருக்கிறது. இதனால் வாழை விவசாயிகள் பலரும் தாங்கள் போட்ட முதலீட்டை கூட திரும்ப பெற முடியாமல் தவித்து வருகின்றனர் “