தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் – வானிலை ஆய்வு மையம்
There Will Be A Rain In Southern Districts For Two More Days
தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் அதன் உட்புற நகர்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
நேற்றைய தினமே திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கும் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது.
“ கோடை வெயிலால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில், கொஞ்சம் இயற்கை மழையைக் கொடுத்து மக்களின் மேல் கருணை காட்டி இருக்கிறது “