தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will Be A Rain Possibilities For Next 24 Hours In 16 District In TN 28 10 23 Idamporul

There Will Be A Rain Possibilities For Next 24 Hours In 16 District In TN 28 10 23 Idamporul

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

“ பெரும்பாலான மாவட்டங்களில் பருவ மழை பெய்ய துவங்கி இருக்கிறது. வழக்கமான மழை பெய்திடுமா என்பது தான் கேள்விக்குறி “



About Author