ஆத்தி திருநெல்வேலி – சென்னை வந்தேபாரத் ரயில் கட்டணம் இவ்வளவா?
திருநெல்வேலி – சென்னை இயங்க இருக்கும் வந்தேபாரத் ரயிலின் கட்டணத்தை அறிவித்து இருக்கிறது தென்ன ரயில்வே.
தமிழகத்தின் முதல் வந்தேபாரத் ரயில் ஆனது திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை இயங்க இருக்கிறது. கிட்டதட்ட 7 மணி நேரம் 50 நிமிடத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னையை அடையும் இந்த ரயிலின் சாதாரண ஏசி வகுப்பு 1620 ரூபாய் எனவும், சொகுசு ஏசி வகுப்பு 3,025 ரூபாய் எனவும் நிர்ணயித்து இருக்கிறது தென்னக ரயில்வே.
திருநெல்வேலி டு சென்னை செல்ல சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட் விலை 350-400 ரூபாய், அரசு பேருந்துகளில் சீட்டர் 640 ரூபாய், ஸ்லீப்பர் 850 ரூபாய், தனியார் பேருந்துகளில் ஸ்லீப்பர் அதிகபட்சம் 1500 ரூபாய் வரை என்று விலை இருக்கும் போது, வந்தே பாரத் ரயிலின் சாதாரண ஏசி வகுப்பே 1,620 ரூபாய் என்று நிர்ணயித்தால் சாதாரண நடுத்தரமக்களுக்கு இந்த வந்தே பாரத் ஏக்கங்களாகவே தான் இருக்கும் என்கின்றனர் நடுநிலைவாதிகள்.
“ ஒரு புதிய திட்டம் என்னும் போது அது நடுத்தரமக்களும் பயன்படும் வகையில் இருந்தாலே அது நல்ல திட்டம் ஆக கருதப்படும். வேகம், விவேகம், வசதிகள் என்று என்ன இருந்தாலும் கூட வந்தேபாரத் நடுத்தர மக்களுக்கு பயன்பட போவதில்லை என்பது தான் ஆகச்சிறந்ததொரு உண்மை “