வரும் ஜூலையில் இருந்து உயருகிறது மின் கட்டணம், யூனிட்டுக்கு எவ்வளவு உயர வாய்ப்பு இருகிறது?
தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலையில் இருந்து புதிய மின்கட்டண உயர்வை அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக மின்வாரிய ஆணையம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் புதிய கட்டண உயர்வை கடந்த 2022-யில் இருந்து அமல்படுத்தி வருகிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் மின்வாரியத்தின் மீது விழுகின்ற கடன்சுமையை குறைக்க இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என அரசு சார்பில் கூறப்படுகிறது. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இது மிகப்பெரிய பாரமாக வந்து விழுகிறது.
கடந்த வருடம் கட்டண உயர்வால் 35,000 கோடிக்கு மேல் தமிழக மின்வாரியம் சம்பாதித்த போதும் கூட அதன் கடனில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போதும் யூனிட்டுக்கு 50 முதல் 70 காசுகள் வரை, வருகின்ற ஜூலை முதல் உயர்த்தப்பட இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து இருப்பது பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
“ மின்வாரியம் கடனில் சென்று கொண்டு இருக்கும் போது மின்சாரத்திற்கான வேறு ஆதாரங்களை உருவாக்குவதே சிறந்த தீர்வாக இருக்குமே தவிர, கட்டண உயர்வு என்பது என்றும் தீர்வாக அமையாது என்பது பலரின் கருத்தாக இருக்கிறது “