TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தது வட்டார போக்குவரத்து அலுவலகம்!
TTF Vasan Driving License Banned For 10 Years Idamporul
TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது வட்டார போக்குவரத்து அலுவலகம்.
பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மோட்டார் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் TTF வாசன். தொடர்ந்து பலரும் வாசனை பின் தொடர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதால், அவரது ஓட்டுநர் உரிமத்தை 2033 வரை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம்.
“ ஏற்கனவே மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அவரது பைக்கை எரிக்கவும், அவரது யூடியூப் சேனலை முடக்கவும் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது “