டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை!

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய கோரி தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்து இருக்கிறது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி, பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி, தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

“ வீலிங், சாகசம் என்ற பெயரில் இளைஞர்களையும் திசை திருப்பி, பொது மக்களுக்கும் இடையூறு செய்கிற ஒவ்வொருவரும் இப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது “

About Author