விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் மட்டும் வாழ்த்து, இதனால் விஜய் சொல்ல வரும் அரசியல் என்ன?
மாநில அந்தஸ்து பெற்ற விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் மட்டும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருப்பதன் மூலம், அவரது எதிர்கால அரசியலின் பாதை என்ன என்பது சற்றே புலப்படுகிறது.
மாநிலத்தில் வென்று இருக்கும் ஆளும் கட்சிக்கோ அல்லது மத்தியில் வென்று இருக்கும் ஆளும் கட்சிக்கோ, அல்லது மத்தியில் இம்முறை சிறப்பாக செயல்பட்ட எதிர்கட்சிக்கோ வாழ்த்துக்கள் ஏதும் தெரிவிக்காமல், மாநில அந்தஸ்து பெற்று இருக்கும் விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் மட்டும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து கூறி இருப்பது அவரது எதிர்கால அரசியலின் பாதையை விளக்குவதாக அமைகிறது.
அதாவது, மதச்சார்பற்ற கட்சிக்கும் ஆதரவு இல்லை, மதச்சார்புள்ள கட்சிக்கும் ஆதரவு இல்லை, தமிழ் தேசியம் மற்றும் சிறுபான்மையினருக்கான ஒரு அரசியல் கட்சியாய் தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் என்பதை ஒரே ஒரு வாழ்த்தின் மூலம் விஜய் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்பது புலப்படுகிறது.
“ நிச்சயம் விஜய் அவர்களின் எதிர்கால அரசியல் கொஞ்சம் வித்தியாசமானதாய் தான் இருக்கும் என தெரிகிறது, கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை விட தமிழக அரசியலையும், மத்திய அரசியலையும் நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார் “