தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!
Tamilnadu Weather Report
இன்றும் நாளையும் தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருக்கிறது.
திருவாரூர், காரைக்கால் ஆகிய இடங்களில் ஏற்கனவே மழைபெய்து வரும் நிலையில், தமிழகத்தின் இதர தென் மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்து இருக்கிறது.
“ தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூரில் கனமழை பெய்து வருவதால் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது “