அரசு நிர்ணயித்த இலக்கினுள் 77 சதவிகிதம் மாணவர்கள் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர்!
Vaccination For Students In TN Reached 77 Percentage
தமிழகத்தில் அரசு நிர்ணயித்த இலக்கினுள் 77 சதவிகிதம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் சில நாட்களாக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு 33.46 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்து இருந்த நிலையில், தற்போது வரை அந்த இலக்கு 77 சதவிகிதம் நிறைவு செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவ துறை செயலர் ராதா கிருஷ்ணன் அறிவித்து இருக்கிறார்.
“ தேசத்தில் செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுள் மாணவர்களுக்கு கோவாக்சின் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது “