ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘We Want Group 4 Results’!
குரூப் 4 ரிசல்ட் தாமதாமாவதை அடுத்து ட்விட்டரில், தேர்வு எழுதிய மாணவர்கள் ‘We Want Group 4 Results’ என்ற ஹேஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் கிட்டதட்ட 18 லட்சத்திற்கும் மேலான தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். தேர்வு முடிவுகளுக்காக தேர்வர்கள் 8 மாதத்திற்கும் மேலாக காத்து இருந்தும் கூட தேர்வு முடிவுகளை அறிவிக்க TNPSC நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேர்வர்கள் ‘We Want Group 4 Results’ என்ற ஹேஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே 2022 அக்டோபர் மாதம் ரிசல்ட்டை அறிவிப்போம் என்று அறிவித்து விட்டு முடிவை அறிவிக்காமல் தேர்வர்களை குழப்பி விட்டு 2022 டிசம்பர் மாதம் வெளியிடுவோம் என அறிவித்தது. டிசம்பரிலும் முடிவை வெளியிடாமல் 2023 பிப்ரவரிக்கு தள்ளி வைத்தது. தற்போது பிப்ரவரி வந்ததும் ரிசல்ட்டை மார்ச் மாதம் அறிவிப்போம் என்ற வெற்று அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறது.
” தேர்வு முடிவுகள் தள்ளி போகிறது என்றால் அதில் முறைகேடுகள் நடப்பதற்கு சாத்தியங்கள் அதிகம் என்பதால் வருடங்கள் கடந்து படித்து தேர்வு எழுதிய தேர்வர்கள் அனைவரும் TNPSC மீதான அதிருப்தியை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர் “