கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஏன் மக்களுக்கு இடையூறாக தெரிகிறது?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்ந்து தென் தமிழகம் செல்லும் மக்களுக்கு இடையூறாக தெரிகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைப்பிற்கான முழுமுதல் காரணம், மாநகரத்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க தான். அரசின் நோக்கமோ காரணமோ சரி தான் என்றாலும் கூட, முழுமையான திட்டமிடல் என்பது இங்கு தவறாகிப் போகி இருக்கிறது.
பொதுவாக விழாக்காலங்களில் சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு பயணிப்பவர்கள் மட்டும் இலட்சங்களை தாண்டும். சரி இலட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து ஏறினால் மாநகரத்திற்குள் ட்ராபிக் கம்மியாகி விடும் என்ற திட்டமிடல் மேல் போக்காக பார்த்தால் சரி என்று தெரிந்தாலும் கூட, ஆராய்ந்து பல்வேறு சூழல்களை உள்நோக்கினால் தவறாக தான் தெரிகிறது.
ஏனென்றால் ஒரு இலட்சம் பேருக்கு மேல் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வர வேண்டுமானால் எத்தனை மாநகர பேருந்துகள் தேவைப்படும்? எத்தனை வாகனங்கள் தேவைப்படும், அத்துனை பேருந்துகளும் அத்துனை வாகனங்களும் மாநகரத்தின் ஊடே தானே கிளாம்பாக்கம் வந்தாக வேண்டும் என்னும் போது எப்படி போக்குவரத்து நெரிசல் என்பது சரி ஆகும்?
அதுவும் ரயில்வே லைன் இல்லாத ஏரியா என்னும் போது, அத்துனை பேரும் சாலையை தான் பயன்படுத்தி கிளாம்பாக்கம் வந்தாக வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்த திட்டம் எப்படி சரியாக இருக்க முடியும்?, சரி இது ஒரு பக்கம் இருக்குமேயானால், இன்னமும் அனைத்து பகுதிகளில் இருந்தும் பெருநகர போக்குவரத்தின் வழியாக கிளாம்பாக்கத்தை அடைய கனெக்ட் செய்யப்படவில்லை. சில பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகளே இல்லை. அப்படியே 500 ரூபாய் கொடுத்து ஆட்டோ, கார் என்று பிடித்து வந்தாலும் கூட, காத்திருப்பு நேரம் அதிகமாக இருக்கிறது. சாப்பிட சரிவர ஹோட்டல்கள் இல்லை, என பல சர்ச்சைகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றி இருந்து கொண்டே இருக்கிறது.
“ ஒட்டு மொத்தமாக பார்த்தால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் இன்னும் நிறைய திட்டமிடலுடன் நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். அவசரகதி அல்லோகதி தான் என்பதை கிளாம்பாக்கம் பஸ் முனையம் நிரூபித்து இருக்கிறது அவ்வளவு தான் “