நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள், TNPSC யின் செயல்முறைகளை பாதிக்குமா?
Will TNPSC Exam Disrupted By Parliament Elections Fact Here Idamporul
தேர்வர்கள் பலரும், நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் TNPSC யின் செயல்முறைகளை பாதிக்குமா என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், TNPSC தரப்பு அதற்கு பதில் அளித்து இருக்கிறது.
TNPSC ஒரு தனித்துவ அமைப்பு, நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள், TNPSC யின் செயல்முறைகளுக்கோ, தேர்வாணையம் நடத்துகிற தேர்வுகளுக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது, தேர்வுகளும், தேர்வுகளை சார்ந்த பணிகளும் அதுபாட்டிற்கு நடக்கும் என TNPSC உறுப்பினர் ஆரோக்யராஜ் கூறி இருக்கிறார்.
“ தேர்வர்கள் தேர்தல், தங்களுடைய முய்றசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று மிகவும் குழம்பி இருந்தநிலையில், TNPSC தானாக முன்வந்து விளக்கம் அளித்து இருப்பது அவர்களுக்கு அழுத்தத்தை குறைத்து இருக்கிறது “