தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இந்த தேர்தலில் சரஸ்வதி செய்யும் வேலைகள், அவரது திட்டம் என்று அனைத்தையும் பார்த்து அசந்து போனார். தனக்கு மிகப்பெரிய துணையே சரஸ்வதி தான் என்று கூறினார். வசுந்தரா இந்த தேர்தலில் கண்டிப்பாக தமிழ் மாமா தான் வெற்றி பெறுவர், அவரிடம் நேர்மை இருக்கிறது. அவருக்கு அந்த தகுதி இருக்கிறது என்று தமிழை உசத்தி பேசினார். அதை கேட்டு கார்த்திக் கோவத்தில் கத்தினார். என் அம்மா தோல்வி அடைய வேண்டும் என்று நினைக்கிறாய் என்று கத்தினார். மேலும் தமிழுக்கு தன் என் ஆதரவு என்றும் வசு கூறினார். கோதை அடுத்த திட்டத்தை நகர்த்தினார். சங்கதுக்கு கட்டிடம் கட்டித்தருவேன் என்று தமிழ் வாக்குறுதி கொடுத்ததால், அதை இவரே ஒரு கோடி ரூபாய்க்கு கட்டி கொடுக்கிறேன் என்று 10 லட்சம் முன்பணமாக கொடுத்தார். இதை பார்த்து உமாபதி தமிழ் இடம் இதை பற்றி பேசினார். தமிழ் , சரஸ்வதி மற்றும் நமச்சி மூவருக்கும் அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…