தளபதி 66 | தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய்!
Thalapathy 66 Director Is Officially Vamshi Paidipally
நடிகர் விஜய் அவருடைய 66 ஆவது படத்திற்காக தெலுங்கு இயக்குநருடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபைலி, நடிகர் விஜய் அவர்களின் 66 ஆவது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை தில் ராஜு மற்றும் ஷிரிஸ் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“ இரண்டு நாட்களாக ‘வலிமை’ தான் ட்ரென்டிங்கில் இருந்தது, ஆனால் இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த ’தளபதி 66’ தான் ட்ரென்டிங்கில் இருக்கும். ஏற்கனவே ட்விட்டர் ட்ரென்டிங்கில் ’தளபதி 66’ முதல் இடத்தில் அரியணை ஏறி விட்டது “