தளபதி 68 திரைப்பட படப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கும் – வெங்கட் பிரபு
Thalapathy 68 Shoot Begins Soon Idamporul
தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் துவங்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார்.
தளபதி 68 திரைப்படத்தின் கதையை விரிவு படுத்திக் கொண்டு இருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு ஜூலைக்குள் கதை வேலையை மொத்தமாக முடித்து விடுவாராம். லியோ திரைப்படத்தின் வேலைகள் முடிந்ததும் ஆகஸ்ட் இறுதியில் தளபதி 68 திரைப்பட படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்து இருக்கிறதாம்.
“ வெங்கட் பிரபு – விஜய் காம்போவில் எந்த ஜார்னரில் திரைப்படம் என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க துவங்கி விட்டனர், காக்க வைக்காமல் அடுத்தடுத்த அப்டேட்டுக்களை உடனடியாக வெளியிடுவோம் என வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறார் “