தமிழகத்தில் தொடங்கியது மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம்!
Third Mega Vaccination In TamilNadu Starts Today
தமிழகத்தில் முதல் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி இருக்கிறது.
தமிழகத்தில் முதல் மெகா தடுப்பூசி முகாம் 28 லட்சம் பேரை சென்றடைந்தது. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை சென்றடைந்தது. இந்த நிலையில் தான் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை இலக்காக கொண்டு இன்று தொடங்கி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி உபயோகம் 4.36 கோடியாக உள்ளது.
இதில் முதல் தவணை மட்டும் எடுத்துக் கொண்டவர்கள் 3.43 கோடியாகவும் , இரண்டு தவணையும் எடுத்துக் கொண்டவர்கள் 95.81 லட்சம் பேராகவும் இருக்கின்றனர். வருகின்ற அக்டோபருக்குள் தகுதியுள்ளவர்களுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசியை செலுத்தி முடிக்கும் பணியில் மும்முரமாக இறங்கி வருகிறது தமிழக அரசு.
“ தானாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தமிழக மக்கள் தங்கள் பங்கினை சிறப்பாக அளித்து வருகின்றனர். அரசும் தடுப்பூசி செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருவதால், தமிழகம் தடுப்பூசி செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது “