பூமி என்னும் ஒரு உன்னத கிரகத்தை மனித இனமாகிய நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம் – ஐநா
பனிப்பொழிவு,நிலச்சரிவு,தொடர்மழை,ஓயாத அனல்,வெள்ளம், வரலாறு காணாத காட்டுத்தீ என்று எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் ஏதேனும் ஒரு இயற்கை பேரிடர் இருந்து கொண்டே தான் இருக்கிறது. புதைபடிவ எரிபொருள்கள், பசுமை இல்ல வாயுக்களை வெளிப்படுத்தும் சாதனங்கள் இவைகளின் பயன்பாடுகளே இந்த காலநிலை மாற்றத்திற்கு பெரிதும் காரணம் என்று ஐநா தனது அறிக்கையில் கூறி உள்ளது.
உலக வெப்பமயமாதல் உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.ஒரு சூழலில் வறட்சி நிலவினால் மற்றுமொரு சூழலில் பேரிடர் விளைவிக்கும் கனமழை பொழிகிறது. இவைகளுக்கெல்லாம் மனித இனத்திற்கு தொடர்புகள் உண்டா என்று கேட்டால் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒவ்வொரு பேரிடற்கும் ஒவ்வொரு தனிமனிதனிற்கும் தொடர்புகள் இருக்கின்றன. தனி ஒவ்வொரு மனிதனின் செயல்பாடே இந்த இயற்கையின் நிலையை தீர்மானிக்கிறது. மரங்களை வெட்டுகிறோம், காடுகளை அழிக்கிறோம், பசுமை இல்ல வாயுக்களை வெளிப்படுத்தும் சாதனங்களை வீட்டிற்கு இருவர் முதல் மூவர் வரை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு தனிமனிதனும் சேர்ந்தது தானே இந்த உலகம். நீ இயற்கைக்கு விரும்பத்தகாத ஒன்றை கொடுக்கும் போது அந்த இயற்கையும் நமக்கு விரும்பத்தகாத இடர்களை தருகிறது.
இத்தகைய காலநிலை மாற்றத்தை யார் தான் சரி செய்ய முடியும் என்றால் இந்த மாற்றத்திற்கெல்லாம் காரணமான மனித இனமே தான் இதை முன்னெடுத்து சரி செய்ய வேண்டும். புதை படிவ எரிபொருள்களை உபயோகிப்பதை குறைக்க வேண்டும். பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் சாதனங்களை தவிர்க்க வேண்டும். இதை செய்தாலே இந்த யுகத்திலேயே இந்த இயற்கையினில் பெரும் மாற்றத்தை நம்மால் கொண்டு வர முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. இந்த உலகம் இன்று 80% இயங்கியும் நகர்ந்தும் ஒளிர்ந்தும் கொண்டிருப்பதே இந்த புதைபடிவ எரிபொருள்களால் தான்.முடிவில் இந்த பூமி என்னும் உன்னத கிரகத்தை, மனித இனமாகிய நாம் நம் சொகுசிற்காக கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கிறோம்.
“ நீ என்னை எந்த அளவுக்கு அழிக்கிறாயோ அதை விட பல மடங்கு நீயும் அழிவாய் உன் நிலமும் அழியும் உன் இனமும் அழியும் – இப்படிக்கு இயற்கை “