இந்தியாவில் 61 கோடியை எட்டியிருக்கிறது தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விடுத்த அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 80 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் மூலம் 61 கோடி பேரை எட்டியிருக்கிறது இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை. மேலும் வயது வந்தோர்களில் குறைந்தபட்சம் ஒருதவணையாவது தடுப்பூசி செலுத்தியவர்களின் விகிதத்தில் 50 சதவிகிதத்தை எட்டி சாதனை புரிந்திருக்கிறது இந்தியா.
இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு இந்த விழிப்புணர்வு தொடர்ந்து சேர வேண்டும் என்றும் மக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டிட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வருகின்ற செப்டம்பர், அக்டோபர் காலங்களே இந்தியாவிற்கு முக்கியமான காலம், அதிகப்படியான பண்டிகைகள் வரபோகிற காலம் என்பதால் மாநில அரசுகள் முறையாக கட்டுப்பாடுகளை விதித்து மக்களை பண்டிகைகளை கொண்டாட வழிவகுக்க வேண்டும். இயல்பாக கொண்டாடும் படி வழிவகை செய்தால் இந்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியா தொற்றில் புதிய உயரத்தை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
“ இரண்டு மாதங்கள் தான் கவனத்துடன் இருந்திடுங்கள், பண்டிகைகளை கூட்டங்களாய் கொண்டாடுவதை தவிர்த்திடுங்கள். வீடுகளுக்குள் குடும்பங்களோடு மட்டும் இந்த பண்டிகைகளை கொண்டாடி உங்களால் இந்த சமூகத்தில் ஏற்படுகின்ற பரவலை முடிந்த அளவுக்கு தடுத்திடுங்கள் “