இந்தியாவில் 70 கோடியை அடைந்திருக்கிறது தடுப்பூசி உபயோகம்!
133 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில் தடுப்பூசி செயல்பாடுகள் என்பது மிக மிக கடினம். அதையெல்லாம் கடந்து 70 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு கொண்டு போய் சேரத்து சாதனை புரிந்திருக்கிறது இந்திய அரசு!
கடந்த 13 நாளில் மட்டும் பத்து கோடி பேருக்கு தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மத்தி வரை தினசரி தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சமாக இருந்து வந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 83 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி செலுத்திய இடைப்பட்ட வயதினர்கள் 56.6 சதவிகிதமாக இருக்கின்றனர். முறையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இடைப்பட்ட வயதினர்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 17.4 சதவிகிதமாக இருக்கின்றனர்.
” இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால் இளைஞர்கள் தங்களை முன்களப் பணியாளர்களாக அமர்த்திக்கொண்டு தடுப்பூசி செயல்பாடுகளை தேசத்தில் ஊக்குவித்து வருவது அறியப்படுகிறது, இந்த செயல்பாடுகள் மென் மேலும் தொடரட்டும் “