இந்தியாவில் 75 கோடியைக் கடந்துள்ள தடுப்பூசி உபயோகம்!
இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 75 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது.
தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவால் மக்கள் தற்போது தாமாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதன் வாயிலாகவே இந்தியாவில் தற்போது தடுப்பூசி உபயோகம் 75 கோடியைக் கடந்துள்ளது. நாள் ஒன்றிற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் விகிதம் இந்தியாவில் 80.6 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
133 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் தடுப்பூசி செயல்பாடுகள் குறித்து முதலில் பயம் நிலவிய போதும் கூட, அரசு அந்த செயல்பாடுகளை மிகவும் நேர்த்தியாகவே கையாண்டது. இதுவரை இந்தியாவில் 57 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் 18.02 கோடி பேர் இரண்டாவது தவணையும் சேர்த்து தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். இதன் மூலமாகவே இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் தற்போது 75 கோடியைக் கடந்து இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 56.29 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர்.
” மக்கள் முன்வரும் போது இங்கு எதுவும் சாத்தியமாகும். தற்போது இந்தியாவில் மக்கள் முன் வந்திருக்கிறார்கள், கொரோனோ ஒழிப்பு வெகு விரைவில் சாத்தியமாகும் “