இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 86 கோடியைக் கடந்து இருக்கிறது!
இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 86 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 86.02 கோடியைக் கடந்து இருக்கிறது. இதனுள் 47.4 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 16.8 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவில் 100 பேருக்கு தலா 64.20 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
இந்தியாவில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும், கிட்ட தட்ட ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மீட்பு விகிதமும் 97.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த பாதிப்பு விகிதத்தில் கேரளாவே 55 சதவிகிதத்தை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
” இன்னும் ஒரு மாத காலக்கட்டத்திற்குள் தடுப்பூசி உபயோகம் 100 கோடி என்ற இலக்கை அடைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது “