இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 90 கோடியை நெருங்கி இருக்கிறது!
இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 90 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி செயல்பாடுகளின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 90 கோடியைத் தொட்டு இருக்கிறது. இந்தியாவில் நூறு பேருக்கு தலா 66.50 பேர் முதல் தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொள்கின்றனர். தடுப்பூசிக்கு தகுதியானவர்கள்
69 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
“ அக்டோபர் முடிவதற்குள் 100 கோடி தடுப்பூசி உபயோகத்தை தேசம் எட்டி விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் “