ஒரே நாளில் ஒரு கோடி பேரை சென்றடைந்திருக்கும் தடுப்பூசி!
கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்றிருக்கையில் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 கோடியை கடந்துள்ளது.
இ்ந்தியாவில் நேற்றைய ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி பேரைச் சென்றடைந்திருக்கிறது தடுப்பூசி. இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச அளவு இது ஆகும். கடந்த ஆகஸ்ட் 17 அன்று ஒரே நாளில் 88 லட்சம் பேரைத் தடுப்பூசி சென்றடைந்ததே இது வரை அதிகபட்ச அளவாக இருந்த நிலையில் நேற்று ஒரு கோடியைத் தொட்டு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களின் ஆர்வம் ஓரளவுக்கு திருப்தி அளித்தாலும் பெரும்பாலானோர் ஒரே தவணையில் நிறுத்திக்கொள்வது இந்தியாவில் வாடிக்கையாகி வருகிறது. சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் 60 சதவிகிதம் அளவிற்கு இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையை வைத்திருக்கும் நிலையில் கிட்டதட்ட அதே அளவிற்கு மக்கள் தொகை வைத்திருக்கும் இந்தியாவோ இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை வெறும் 10 சதவிகிதம் என்ற நிலையில் வைத்துக்கொண்டு மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
“தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் தாங்களாகவே முன்வந்து முறையாக இரண்டு தவணையும் செலுத்திக்கொள்ளுங்கள் அதுவே உங்களை கொரோனோ என்னும் கிருமிக்கு எதிராக உங்களையும் உங்கள் எதிர்ப்பாற்றலையும் தயார்படுத்தும்”