தமிழகத்தில் தடுப்பூசி விநியோகம் 4.33 கோடியை எட்டியுள்ளது!
Vaccination In TamilNadu Reached 4.33 Crores
தமிழகத்தில் தடுப்பூசி விநியோகம் 4.33 கோடியை எட்டியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் 4.33 கோடி தடுப்பூசி விநியோகத்தை எட்டி இருக்கிறது தமிழகம். இதில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 3.41 கோடி பேராக இருக்கிறார்கள். இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 94.31 லட்சம் பேராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“ தமிழகத்தில் வரும் அக்டோபருக்குள் தடுப்பூசிக்கு தகுதியான அனைத்து நபர்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசியை செலுத்தி முடிக்க தமிழக அரசு இலக்கு வகுத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது “