மறுபடியும் தடுப்பூசி ஏற்றுமதியை துவங்க இருக்கும் மத்திய அரசு!
இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியும், இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இரண்டாவது அலையின் போது நாட்டிற்கு தேவைப்பட்ட அதிகமான டோஸ்களின் காரணமாக கடந்த ஏப்ரலில் தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பயன்பாடுகள் குறைந்து வருவதால் நாட்டிற்கு போக மிச்சத்தை பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது மத்திய அரசு.
ஓரு சில நலிந்த நாடுகள், தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை தாங்களே தயாரித்து கொள்ள முடியாத நாடுகளைக் கண்டறிந்து அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் மத்திய அரசு உத்தரவளித்துள்ளது.
“ தேசத்தில் தகுதியுள்ள 95 கோடி பேர்களுக்கு வரும் அக்டோபருக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. நம் தேசத்தைப் பொறுத்தவரை தடுப்பூசி செயல்பாடுகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையிலும், ஆத்ம திருப்தி அளிப்பதாகவுமே இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “