சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘வலிமை Glimpse’ ஹேஸ்டாக்!
Valimai Glimpse Trending In Social Media
அனைத்து சமூக வலை தளங்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது ‘வலிமை Glimpse’ ஹேஸ்டாக்.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ’Glimpse’ இன்று வெளியாகும் என்று ஒரு சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவித்திருந்த நிலையில், தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது ‘வலிமை Glimpse’ ஹேஸ்டாக்!
“ ஒரு அறிவிப்பு அதிகாரப்பூர்வமற்றதாக இருந்தாலும் கூட அதை ட்ரெண்டிங்கில் ஏற்றி விடுவது தல ரசிகர்களின் வழக்கம். அவர்கள் அஜித் என்னும் மனிதனின் மேல் வைத்திருக்கும் அந்த அன்பு அளப்பரியது “