மீண்டும் சமூக வலை தளங்களில் ட்ரென்டிங்கில் இருக்கும் ‘வலிமை’!
Valimai Again Trending In Social Platforms
ஒரு படம் வருவதற்கு முன்னரே ஓராயிம் முறைக்கும் மேலாக சமூக வலைதளங்களில் ட்ரென்டிங்கில் இருந்திருக்குமானால் அது இந்தியாவிலேயே நிச்சயம் ‘வலிமை’ படமாகத்தான் இருக்க முடியும்.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் சமூக வலை தளங்களில் ‘ValimaiPONGALIn100D’ என்ற ஹேஸ்டாக் சமூக வலைதளங்களில் ட்ரென்ட் ஆகி வருகிறது.
இது போக சில வாரங்களுக்கு முன் வெளியாகி இருந்த ‘வலிமை Glimpse’-ம் 10 மில்லியன் வியூக்களையும், 8.84 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் அள்ளி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
“ இந்த வருடத்தில் அதிக அளவில் பகிரப்பட்ட ஹேஸ்டாக்குகளில் ஏற்கனவே ’வலிமை’ முதல் இடத்தில் இருக்கும் நிலையில், தொடர்ந்து வாரம் ஒரு முறை ட்ரென்டிங்கில் வலிமையை வலிமையாக முன்னிறுத்தி வருகின்றனர் அஜித் ரசிகர்கள் “