’விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்பட்டு விட்டதா?

Vijay Makkal Iyakkam Dissolved SA ChandraSekar

Vijay Makkal Iyakkam Dissolved SA ChandraSekar

’விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்பட்டு விட்டதாக நடிகர் விஜய் அவர்களின் தகப்பனார் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

’விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் நடிகர் விஜய் அவர்களின் தகப்பனார் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பதில் மனு ஒன்று கொடுத்துள்ளார். ஆனால் நடிகர் விஜய் தரப்பினரோ அதை மறுத்து நடிகர் விஜய் அவர்களின் கீழ் செயல்படும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்படவில்லை அது எப்போதும் போல ரசிகர்களால் நலத்திட்ட பணிகளுக்கு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

“ நடிப்பில் மும்முரமாக இயங்கி கொண்டிருக்கும் விஜய் அவர்களுக்கு, ஏனோ தொடர்ந்து ஒரு சில சிரமங்களை அவரது தகப்பனார் எஸ்.ஏ.சந்திரசேகரே கொடுத்து வருவது ஏன் என்பது தான் இங்கு புரியாத புதிராக இருக்கிறது “

About Author