விஜய் சேதுபதியின் ’முகிழ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது!
Vijay Sethupathy Mughizh Teaser Is Out
ஸ்ரீஜா விஜய் சேதுபதி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘முகிழ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன் அவர்களின் இயக்கத்தில், ஸ்ரீஜா விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி, ரெஜினா கேசந்திரா, ஸ்கூபி மற்றும் பலர் நடிக்கும் ‘முகிழ்’ திரைப்படத்தின் உணர்ச்சிகரபூர்வ டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது.
“ விஜய் சேதுபதி, ஸ்கூபி என்னும் ஒரு நாயுடன் பேசும் உரையாடலை காட்சிப்படுத்தி டீசராக வெளியிட்டுள்ளனர். படத்தின் கதைக்களம் புரியவில்லை ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு புதிய ஜார்னராக இருக்கும் என்பது மட்டும் புலப்படுகிறது “