ஏன் யோகியின் காலில் விழுந்தார் ரஜினி? விமர்சனத்துக்கு உள்ளான ரஜினியின் செயல்!
Rajinikanth Touches Yogi Feet At Lucknow Idamporul
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலைக்கு பக்தி சுற்றுலா மேற்கொண்டு விட்டு லக்னோவில் இருக்கும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களையும் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
கிட்டதட்ட 20 வயது வேறுபாடு உடைய நடிகர் ரஜினிகாந்த் ஏன் யோகியின் காலில் விழ வேண்டும் என்பது பெரும்பலானோரின் கேள்வியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் யோகி முதல்வர் மட்டும் அல்ல, கோரக்னாத் மாத் கோவிலின் தலைமை மஹந்த் அதனால் ரஜினி யோகியின் காலில் விழுந்து இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
“ ரஜினிகாந்த் ஒரு ஆன்மிகவாதி, அவர் ஆன்மீகத்தின் மீது மிகுந்த பற்றுடையவர், அதனால் ஒரு மஹந்தின் காலில் விழுவதில் தப்பில்லை, என்பது, ரஜினி ரசிகர்களின் எதிர் விவாதமாக இருக்கிறது “