தமிழக அரசை கேள்வி எழுப்பும் ட்விட்டர் ’ஹேஸ்டாக்’!
தமிழக அரசை கேள்வி எழுப்பும் விதமாக ‘பதில் சொல் திமுக’ என்னும் ஹேஸ்டாக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர நடத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்ற சூழலில் அதற்கு தகுந்த காரணம் கேட்டு ஒரு தரப்பினர் ‘பதில் சொல் திமுக’ என்னும் ஹேஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பெரும்பாலான மாநில வருவாய் பெட்ரோல் மற்றும் டீசலின் மீது விதிக்கப்படும் வரிகளின் கீழ் வருவதால் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசல் வருவதை ஆதரிக்கவும் இல்லாமல் எதிர்க்கவும் இல்லாத நோக்கில் செயல்பட்டதால் அந்த ஆலோசனை அத்துடன் கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
“ எதிர்கட்சியாக இருக்கும் போது பெட்ரோல் விலையேற்றத்தை எதிர்த்தும் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரவும் மும்முரமாக போராடியவர்கள், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் சூழலில் அது குறித்த ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் கூட பங்கேற்காதது ஏன் என்பது தான் இங்கு பல சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது “