அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு – தமிழக அரசு
தமிழக அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து, 40 சதவிகிதமாக அதிகரித்து தமிழக சட்டபேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனிதவள வேளாண்மைத்துறை பிரிவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தான் வெளியிட்ட அறிக்கையில், அரசுப்பணிகளில் இதுவரை இருந்த 30 சதவிகிதம் மகளிர் இட ஒதுக்கீடு இனிமேல் 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் எனவும் அறிக்கை விடுத்துள்ளார்.
இது போக தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், கொரோனோவினால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கும் அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சட்டபேரவையில் தனது அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
“ ’அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?’ என்று கேள்வி கேட்ட அதே சமூகத்தில், மகளிரை அரசுப்பணியில் உட்கார வைத்து அழகு பார்ப்பதற்காக, 30 சதவிகிதம் இருந்த இட ஒதுக்கீட்டை, 40 சதவிகிதமாக அதிகரித்திருக்கும் தமிழக அரசிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் “