உலகப் புகழ்பெற்ற ’மீம்ஸ் நாயகன்’ சீம்ஸ் டாக் கேன்சரால் மரணம்!
World Famous Cheems Dog Died At 12 Idamporul
உலகம் முழுக்க புகழ்பெற்ற மீம்ஸ் நாயகன் சீம்ஸ் டாக் கேன்சரால் மரணம் அடைந்து இருக்கிறது.
உலகம் முழுக்க மீம்ஸ் மூலம் புகழ்பெற்ற சீம்ஸ் டாக் 12 வயதில் கேன்சரால் மரணம் அடைந்து இருக்கிறது. மீம்ஸ்களின் நாயகனாக உலா வந்த சீம்ஸ் கடந்த ஒரு வருடங்களாகவே கேன்சராம் அவதிப்பட்டு வந்ததாம். தொடர்ந்து நோய்க்கு எதிராக போராடி வந்த சீம்ஸ் நேற்றைய தினம் அகால மரணத்தை எதிர்கொண்டு இருக்கிறது.
“ சீம்ஸ் டாக்கின் இறப்பிற்கு உலகம் முழுக்க இருக்கும் அதன் ரசிகர்கள் இணையதளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் “