தைவானை சுற்றி போர் பயிற்சி மேற்கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட சீன விமானங்கள்!
China Fighter Jet Flies Over Taiwan
தைவானை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட சீன விமானங்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சுற்றுப் பயணம் மேற்கொண்டதை அடுத்து சீனா தொடர்ந்து தைவானுக்கு பதற்றத்தை கொடுத்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நவீன ரக பைட்டர் ஜெட் விமானங்களை தைவானை சுற்றி பறக்கவிட்டு போர் பயிற்சிகள் புரிந்து வருகிறது சீனா.
“ ஜி7 நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் கூட சீனா பின்வாங்குவதாக தெரியவில்லை. தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது “