உக்ரைன் – ரஷ்யா போரில் 20,000 ரஷ்யா வீரர்கள் பலியாகி இருக்கலாம் – அமெரிக்க ஊடகம்
20000 Plus Russian Armed Man Dies In Ukraine War Says US Reports Idamporul
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் கிட்டதட்ட 20,000 ரஷ்ய வீரர்கள் உயிர் நீத்து இருக்கலாம் என அமெரிக்க ஊடகம் தகவல் தெரிவித்து வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி துவங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், போரில் கிட்டதட்ட 20,000 ரஷ்ய வீரர்கள் மடிந்து இருக்கலாம் என அமெரிக்க ஊடகம் தகவல் தெரிவித்து வருகிறது. இது குறித்து ரஷ்யா எதுவும் பதில் அளிக்காத நிலையில் தகவல் உண்மையாக இருக்கலாம் உலகளாவிய ஊடகங்கள் யூகித்து வருகின்றன.
“ போர் இறப்பு குறித்து ரஷ்யாவும் சரி, உக்ரைனும் சரி வாயை திறக்காத நிலையில், அமெரிக்கா இன்னொருபுறம் இருந்து கொண்டு அனைத்தையும் ஆராய்ந்து வருகிறது “