காஸா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 300 பேர் பலி!
காஸா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 300 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காஸா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தைகள் உட்பட 300 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
தொடர்ந்து காஸாவின் மேற்கு பகுதிகளில் தாக்குதல் நடைபெற்று வருவதால், மீட்பு பணிகளும் நடத்த முடியாமல் காஸா மீட்பு படையினர் தவித்து வருகின்றனர். இடிபாடிகளில் சிக்கிய நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.
“ போர் விதிமுறைகளை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து கடும் கண்டனங்களையும் எச்சரிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர் “