தைவானில் அதிபயங்கர நிலநடுக்கம், அப்பளமாக உடைந்து நொறுங்கிய கட்டிடங்கள்!
தைவானில் 7.4 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் உடைந்து நொறுங்கி இருக்கின்றன. இதன் தாக்கத்தால் ஜப்பானில் இரண்டு தீவுகளில் சுனாமி அலைகளும் எழும்பி இருப்பதாக தகவல்.
25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானில் அதிபயங்கர நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுகளில் பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் தைவானே உருக்குலைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் விளைவால் ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலைகள் எழ வாய்ப்பு இருப்பதாகவும் ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வகம் எச்சரித்து இருக்கிறது.
கிட்ட தட்ட இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கு ஆரம்பித்த நில நடுக்கம் தற்போது வரை 12 முறை அடுத்தடுத்து நிலநடுக்க அலைகளை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாதிப்புகள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. ஆனாலும் கட்டிடங்கள் உருக்குலைந்து கிடக்கும் காட்சியை பார்க்கும் போது, உயிரிழப்புகள் அதிகம் இருக்க கூடும் என தெரிகிறது.
“ நிலநடுக்கம் நிலப்பகுதியில் உணரப்பட்டு இருப்பதால் கட்டிடங்களோடும், ஒரு சில பாதிப்புகளோடும் போயிற்று, ஒரு வேலை கடலுக்கடியில் இதே நிலநடுக்கம் உணரப்பட்டு இருந்தால், அதி உயர அலைகள் எழும்பி பெரும் சேதத்தை விளைவித்து இருக்க கூடும் என்கின்றனர் நிலநடுக்க ஆய்வாளர்கள் “