உலகில் பதிவாகும் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகள் தான் – உலக சுகாதார அமைப்பு
உலகில் பதிவாகும் தொற்றுகளில் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகளாக தான் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது.
உலகெங்கும் தற்போது உறுதி செய்யப்படும் தொற்றுகளில் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகளாக தான் இருப்பதாகவும் மீதி 15 சதவிகிதம் தொற்றுகள் டெல்டா வகையை சேர்ந்ததாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த ஒமிக்ரான் மீண்டும் உருமாறவும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது.
“ இனி இந்த கொரோனாவை உலகில் இருந்து நீக்க முடியாது. இது எப்போதோ உலகெங்கும் சமூகப் பரவலாகி விட்டது என்று உலகளாவிய மருத்துவ வல்லுநர்கள் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து தங்கள் கருத்தை முன்மொழிந்து இருக்கின்றனர் “