மூன்று நாடுகளை சின்னா பின்னம் ஆக்கிய ‘அனா’ வெப்ப மண்டல புயல்!
Cyclone Ana Hits South Side Of African Countries
ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி, மொசம்பிக் நாடுகள், ‘அனா’ எனப்படும் வெப்ப மண்டல புயலால் சின்னா பின்னம் ஆகி இருக்கிறது.
’அனா’ எனப்படும் வெப்ப மண்டல புயல், ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி, மொசம்பிக் ஆகிய பகுதிகளை வெள்ளம், பேரிடர், நிலச்சரிவு என்று பல்வேறு இடர்களால் உருக்குலைத்து இருக்கிறது. கிட்ட தட்ட ஒரு லட்சம் பேர் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். 80-க்கும் மேலானோர் பேரிடரில் பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
“ சூழலியல் மாற்றங்களால் தொடர்ந்து புவி பல்வேறு பேரிடர்களை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதன் முடிவு இன்னமும் விபரிதமாகத்தான் இருக்கும் என புவியியல் வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர் “