சீனாவின் முப்படைகளும் தைவானை சுற்றி வளைப்பு, அமைதி காக்கும் அமெரிக்கா!
China Conducts Millitary Excercise In Taiwan Border
சீனாவின் முப்படைகளும் தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சி செய்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் பயணத்தை சமீபத்தில் மேற்கொண்டு இருந்தார். இதனால் கொந்தளித்த சீனா தைவானை சுற்றி முப்படைகளையும் நிறுத்தி ஏவுகணை பயிற்சி செய்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போரே இன்னும் முடியாத நிலையில் உலகம் அடுத்த போரை தாங்குமா என்பது தான் தெரியவில்லை.
“ எங்கு எங்கு அமெரிக்கா கால் வைக்கிறதோ அங்கெல்லாம் போர் மேகம் சூழ்கிறது. தற்போது பயணத்தை முடித்துவிட்டு பெலோசி தென் கொரியா சென்று விட்டார். அவரிடம் இந்த சூழல் குறித்து பத்திரிக்கையாளர் கேட்ட போது அவரோ அமைதி காக்கிறார் “