நீர் வற்றிப் போனதால் நீர் வீழ்ச்சியையே போலியாக உருவாக்கிய சீன சுற்றுலாத் துறை!
சீனாவின் மிக உயரமான செங்குத்து நீர் வீழ்ச்சியாக பார்க்கப்படும் யுண்டாய் அருவியை சுற்றுலா பயணி ஒருவர் டூப்ளிகேட் நீர் வீழ்ச்சி என கண்டறிந்து இருக்கிறார்.
சீனாவின் யுண்டாய் ஜியோ பார்க்கின், யுண்டாய் மலையில் அமைந்து இருக்கும் இந்த யுண்டாய் அருவி கிட்டதட்ட 1033 மீட்டர் நீளம் கொண்ட செங்குத்தான நீர்வீழ்ச்சி என அறியப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய செங்குத்தான நீர் வீழ்ச்சி என்பதால் உலகளாவிய அளவில் சுற்றுலா பயணிகள் இந்த அருவியை காண்பதற்கென்றே இந்த சைட்டுக்கு வருகை தருவது உண்டாம்.
இந்த நீர் வீழ்ச்சி சில வருடங்களாகவே வறண்டு நீரற்று போனதாக கூறப்படுகிறது. அருவி நீரற்று போனால் இதனைக்காண சுற்றுலா பயணிகள் வர மாட்டார்களே என யோசித்த சீன சுற்றுலாத்துறை, அருவியின் உச்சியில் யாருக்கும் தெரியாமல் பைப் லைன் போட்டு ஒரு டூப்ளிகேட் ஆன நீர் வீழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. சுற்றுலா பயணிகளும் அது உண்மையான நீர் வீழ்ச்சி என கண்டு களித்து வந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் மலையேறும் சுற்றுலா பயணி ஒருவர் மலை உச்சியில் சென்று பார்த்த போது, பைப்லைனை கண்டு அதிர்ந்து போகவே, அந்த டூப்ளிகேட் நீர் வீழ்ச்சியை ஆதாரத்துடன் அம்பலம் ஆக்கி இருக்கிறார். அதை சமூக வலைதளங்களிலும் பதிவிடவே தற்போது சீன சுற்றுலாத்துறை வெட்கி தலைகுனிந்து நிற்கிறது.
“ இது குறித்து சீன சுற்றுலாத்துறை நிர்வாகிகளிடம் கேட்ட போது சுற்றுலா பயணிகள் ஏமாந்து விட கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு செட்டப்பை செய்ததாக கூறுகிறார்கள். இருந்தாலும் அருவியிலும் டூப்ளிகேட்டை செய்து காட்டி, சீனா டூப்ளிகேட் என்பதன் புதிய உச்சம் தொட்டு இருக்கிறது “