தொடர் போராட்ட காரணங்களால் ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தி இருக்கிறது சீனா.
தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் சீனாவில் அதிகரித்து வந்ததால் கடும் ஊரடங்கை மீண்டும் சீன அரசு விதித்து இருந்தது. இதை எதிர்த்து பொது மக்களும், வணிகர்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களை நிகழ்த்து வந்ததன் விளைவு ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தி இருக்கிறது சீன அரசு.
“ தற்போது சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஐம்பதாயிரத்தை நெருங்கி இருக்கிறதாம். ஜீரோ கட்டுப்பாடுகளை அறிவித்து இருப்பதால் தினசரி பாதிப்பு இன்னமும் கூட அதிகரிக்கலாம் என சீன மருத்துவதுறை எச்சரித்து இருக்கிறது “